தமிழகத்தில் கொரோனா நோய் தோற்ற அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு நாளை 15-05-2021 முதல் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு திருச்சியில் அமல்படுத்தப்படுகிறது.

புதிய கட்டுப்பாடுகள்

1. புதிய கட்டுப்பாடுகள் • தனியாக செயல்படுகின்ற மளிகை , பலசரக்குகள் , காய்கறிகள் , இறைச்சி , மீன் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்ட நிலையில் , தற்போது இந்தக் கடைகள் அனைத்தும் காலை 06.00 மணி முதல் காலை 10.00 மணி வரை மட்டும் இயங்க அனுமதிக்கப்படும் . இவற்றில் , ஒரே சமயத்தில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் . Dunzo போன்ற மின் வணிக நிறுவனங்கள் ( e – commerce ) மூலம் மளிகை , பலசரக்குகள் , காய்கறிகள் , இறைச்சி மற்றும் மீன் விநியோகம் செய்ய காலை 06.00 மணி முதல் காலை 10.00 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படும் . மேற்கூறிய மளிகை , பலசரக்குகள் , காய்கறிகள் , இறைச்சி , மீன் கடைகள் தவிர , இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது .

•அனுமதி உண்டு…

ATM , பெட்ரோல் டீசல் பங்குகள் ஆகியவை எப்போதும் போல செயல்படும் . . ஆங்கில மற்றும் நாட்டு மருந்துக் கடைகள் திறக்க வழக்கம்போல் அனுமதிக்கப்படும் .மின் வணிக நிறுவனங்கள் ( e – commerce ) மதியம் 02.00 மணி முதல் மாலை 06.00 மணி முடிய செயல்பட அனுமதிக்கப்படும் .

அனுமதி இல்லை….

காய்கறி , பூ , பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் நண்பகல் 12 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில் , தற்போது , காய்கறி , பூ , பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் செயல்பட அனுமதி இல்லை. தேநீர்க் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில் , தற்போது தேநீர்க் கடைகள் இயங்க அனுமதி இல்லை . •

இ – பதிவு முறை ( e – Registration ) . வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ – பதிவுமுறை ( e – Registration ) கட்டாயமாக்கப்படும் .அத்தியாவசியப் பணிகளான திருமணம் , முக்கிய உறவினரின் இறப்பு , மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை ( Elderly care ) போன்றவற்றிற்கு மாவட்டங்களுக்குள்ளும் மற்றும் மாவட்டங்களுக்கிடையேயும் பயணம் மேற்கொள்ள இ பதிவுமுறை ( e – Registration ) கட்டாயமாக்கப்படும் . ( https : // eregister . tnega . org ) . . இ – பதிவு முறை 17.05.2021 காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும் .

கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த , பொதுமக்களின் நலன் கருதி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் , பொதுமக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும் கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும் . கொரோனா மேலாண்மைக்கான தேசியவழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி , பொது இடங்களில் முகக்கவசம் அணிவது , சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது , கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் . நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன் , பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெறவேண்டும் . பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்