திருச்சி பாலக்கரை அண்ணா சிலை அருகில், ஏ.எஸ்.ஜி. லூர்து சாமி பிள்ளை நினைவாக, கேம்பியன் பள்ளி முன்னாள் மாணவர்கள் இணைந்து நடத்தும், நண்பர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற பெயரில், சாலையோர மக்களுக்கான காலை உணவு வழங்கும் துவக்க விழா இன்று நடந்தது இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் கலந்துகொண்டு சாலையோர மக்களுக்கு உணவளித்தார்.

நண்பர் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் கொரோனா பெருந்தொற்று ஆரம்பித்த காலம் முதல் தொடர்ந்து ஏழை எளியவர்களுக்கு காலை மற்றும் மதிய உணவுகளை வழங்கியும், இலவசமாக வாங்க விரும்பாதவர்களுக்கும், வயிறு நிறையும் வரை சாப்பிடும் வகையில் இட்லி பொங்கல் போன்றவற்றை 10 ரூபாய்க்கு வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படுதாகவும் தெரிவித்தனர்.

மேலும் உணவகங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் மீதமாகும் உணவு வகைகளைப் பெற்று இயலாதோருக்கு வழங்குவதாகவும் இந்த அமைப்பின் தலைவர் தாமஸ் ஞானராஜ் எம்எல்ஏ விடம் தெரிவித்ததார். மேலும் எளியவர் பசியாற்றும் இந்த இனிய நிகழ்ச்சியில், பாலக்கரை பகுதி கழக செயலாளர் ராஜசேகர், சாரிட்டபிள் உறுப்பினர்கள். மோகன், சிவராமன், சொக்கலிங்கம், சரவணன், மருத்துவர்.செந்தில், லாரன்ஸ் தம்பி, செல்லா ராமசாமி, வட்ட கழக செயலாளர் எடிங்டன், கழக நிர்வாகிகள், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தைச் சார்ந்த நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *