நபிகள் நாயகம் பிறந்த நாளை (மிலாது நபி) முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டம் சிறுபான்மை அணியினர் சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி புத்தூர் நால்ரோடு சண்முகா திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் தலைமை தாங்கிட, திருச்சி மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் டேனியல் சம்பத் முன்னிலை வகித்தார்.‌ இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ஸ்ரீநிவாசன் கலந்துகொண்டு 300க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு வேஷ்டி சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறுபான்மை அணி மாவட்ட பொதுச்செயலாளர் தென்னூர் தளபதி பாட்சா செய்திருந்தார். மேலும் இவ்விழாவில் சிறுபான்மை அணி மாநில தலைவர் அசிம் பாட்சா, சிறுபான்மை அணி மாநில துணைத்தலைவர் சார்லஸ் மற்றும் திருச்சி மாவட்ட சிறுபான்மை அணி நிர்வாகிகள், திருச்சி மாவட்ட பேரன்பாடி நிர்வாகிகள், திருச்சி மாவட்ட அணி மற்றும் பிரிவு தலைவர்கள், திருச்சி மண்டல தலைவர்கள் மற்றும் தேசிய மற்றும் மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் இறுதியாக திருச்சி தென்னூர் மண்டல தலைவர் பரஞ்சோதி மற்றும் சிறுபான்மை அணி மண்டல தலைவர் ஜெரோம் ஆகியோர் நன்றியுரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published.