மயிலாடுதுறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் லெட்சுமி என்ற மாணவி இரண்டு கைகளும் இல்லாத நிலையில் ஆசிரியர் உதவியுடன் தேர்வு எழுதினார். பிறந்தபோது இரண்டு கைகளும் இல்லாத குழந்தை என்பதால் பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டு, மயிலாடுதுறையில் உள்ள ஆதரவற்றோர் காப்பகமான அன்பகத்தில், இரண்டு வயதிலிருந்து வளர்ந்து வருகிறார்.

மனம் தளராமல், தன்னம்பிக்கையுடன் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவி லட்சுமி 277 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்து உள்ளார். தேர்ச்சி பெற்ற மாணவியை காப்பக நிர்வாகி மற்றும் சக மாணவ, மாணவியர்கள் பாராட்டி இனிப்பு வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *