தமிழக சிறுபான்மை பள்ளி ஆசிரியர் சங்க மாநில நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் மற்றும் கொரோனா விழிப்புணர்வு கருத்தரங்கம் ஆகியவை திருச்சி ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடந்தது. கூட்டத்தில் சிறுபான்மை பள்ளி ஆசிரியர் சங்க தலைவர் பிரெட்டின் வரவேற்றினார். சிறப்பு அழைப்பாளராக கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில் இது தொடர்பான விஷயங்களை தமிழக முதல்வரிடமும், மற்றும் பள்ளிக்கல்வி அமைச்சருடன் பேசி ஆவனம் செய்வதாக உறுதியளித்தார்.

மேலும் இந்த கூட்டத்தில் 1991 முதல் தொடங்கப்பட்ட தரம் உயர்த்தப்பட்ட தமிழ் வழி சிறுபான்மை மற்றும் சிறுபான்மை இல்லாத சுயநிதி பள்ளிகளுக்கு தமிழக அரசு நிதி உதவி அளித்து வந்தது பின்னர் 1999 இல் அந்த நிதி உதவி நிறுத்தப்பட்டது ஆகவே நிறுத்தப்பட்ட நிதியுதவியை மீண்டும் தமிழக அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்திற்கு தமிழ் வழி கல்வி பள்ளிகளின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் செபாஸ்டின், மாநில செய்தி தொடர்பாளர் சகாயராஜ் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க நிர்வாகிகள் மாநில செயலாளர் பெஸ்கி தென் மாவட்ட சிறுபான்மையினர் நலப் பேரவை பொறுப்பாளர் அருள் சாமுவேல் நல ஆணைய உறுப்பினர் இருதயம் ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி தாளாளர் யூஜின் தமிழ்நாடு கத்தோலிக்க கல்விக்கழக மாநிலச் செயலாளர் போஸ்கோ உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்