இந்தியா முழுவதும் நீட் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்பையில் தனியார், அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்நிலையில் இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப் பிப்பதற்கான விண்ணப்ப செயல்முறை கடந்த ஏப்ரல் 6-ம் தேதி முதல் தொடங்கியது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 6 என தெரிவித்திருந்த நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை மே 15-ம் தேதி வரை நீட்டித்ததுள்ளதாக அறிவித்தது. தற்போது வரை சுமார் 20 லட்சம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர்.

இந்தியா முழுவதும் ஜூலை 17-ம் தேதி நீட் நுழைவு தேர்வு நடைபெற உள்ளது. 2016 – 2021 வரையில் நடத்தப்பட்ட தேர்வுகள் 3 மணி நேரம் மட்டுமே நடைபெற்ற நிலையில், 2022-ம் ஆண்டுக்கான தேர்வு நேரம் 3 மணி 20 நிமிடங்களாக அதிகரிக்கப் பட்டுள்ளது. 200 கேள்விகளுக்கு, 200 நிமிடங்கள் என்பதன் அடிப்படையில் தேர்வுக்கான நேரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (மே 15) கடைசி நாளாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்