திருச்சி தில்லைநகர் பகுதி டிபன்கடையில் வேலைபார்த்து வருபவர் ராஜேஸ்வரி இவர் வழக்கம்போல் தனது வேலைக்காக வந்தபோது கடையின் அருகே சாலை ஓரத்தில் கிடந்த காகித பையை எடுத்து பார்த்தபோது அதில் அதிகபடியான பணம் இருந்துள்ளது . அதன்பின்னர் தான் வேலைபார்த்து வரும் டிபன் கடையின் உரிமையாளர் பிரபாகர் என்பவர் உதவியுடன் சாலையில் கிடந்த ரூபாய் 2 லட்சம் பணத்தை திருச்சி மாநகரம் தில்லை நகர் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார் .

மேலும் விசாரித்தில் பணத்தை ஒப்படைத்த ராஜேஸ்வரியின் தினசரி சம்பளம் ரூ .100 என தெரியவந்தது . இதனை அறிந்த திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் ராஜேஸ்வரி தனது ஏழ்மையான சூழ்நிலையிலும் அடுத்தவரின் பணத்திற்கு ஆசைப்படாமலும் , நேர்மை தவறாமல் சாலையில் கீழே கிடந்த ரூ .2 லட்சம் பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்தற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் அவரை நேரில் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து சால்வை அணிவித்தும் , பரிசாக ஒரு கிராம் தங்கநாணயம் வழங்கியும் தனது பாராட்டுகளை தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்