செங்குளத்தான் குழந்தலாய் அம்மன் சிலம்பம் அகாடமி சார்பில் திருச்சி உறையூரில் உள்ள சேஷ ஐயங்கார் நினைவு பள்ளியில் 112 மாணவ, மாணவிகள் சேர்ந்து 1 மணி நேரம் சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை செய்தனர்.

இந்த நிகழ்ச்சியை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் லட்சுமி நாராயணன் துவங்கி வைத்தார்.இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் 6 வயது முதல் 18 வயது வரையிலான மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு உள் சுத்து,வெளி சுத்து,கலப்பு சுத்து என பல்வேறு வகையான வகையில் தொடர்ச்சியாக 1 மணி நேரம் சிலம்பம் சுற்றினர்.

சிலம்பம் சிற்றிய மாணவ,மாணவிகளின் பெற்றோர்கள் சுற்றி நின்று கைதட்டி ஆரவாரம் செய்து ஊக்கப்படுத்தினர். பின்னர் உலக சாதனை செய்த மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *