சுதந்திர போராட்ட தியாகி தெய்வத்திரு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி முன்னிட்டு இன்று காலை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

காங்கிரஸ் சேவா தள மாநில பொதுச்செயலாளர் ஜெகதீஸ்வரி, திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் மலைக்கோட்டை முரளி காங்கிரஸ் மாநில சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் மன்சூர் மாவட்ட நிர்வாகிகள் குமார், மாவட்ட சேவா தள தலைவர் குத்தூஸ் கலைப்பிரிவு கோட்டத் தலைவர் ராஜீவ் காந்தி சண்முகம் காங்கிரஸ் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர் அதைத்தொடர்ந்து அருகிலுள்ள கல்விக்கண் திறந்த தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.