தனது நீண்டகால அரச வாழ்வில், 16 போர்களை சந்தித்து, அவை அனைத்திலும் மகத்தான வெற்றி பெற்ற பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், நிகரில்லா மாவீரனாக திகழ்ந்தார். தமிழ் மொழியைக் காப்பதிலும், தமிழ் மொழியின் சிறப்புகளை கல்வெட்டுகளில் பதித்து, அவை காலத்திற்கும் நிலைப் பெறச் செய்தவர்.இத்தகைய சிறப்புமிக்க பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் பிறந்தநாளான சதயவிழா, ஆண்டுதோறும் மே 23ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே முத்தரையர் மணிமண்டபம், ரூ.99 லட்சம் செலவில், அவரது முழு உருவச் சிலையுடன், 2,400 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது‌. மேலும், 1,184 சதுர அடி பரப்பளவில் மண்டபத்தின் தரைத் தளமானது கிரானைட் கற்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர்த்து, நீதிக்கட்சியின் வைரத்தூணாக விளங்கிய சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் மணிமண்டபம், ரூ.43 லட்சம் மதிப்பீட்டில், 1,722 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே. தியாகராஜ பாகவதர் மணிமண்டபம், ரூ.42 லட்சம் செலவில், 1,722 சதுர அடி பரப்பளவிலும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.மொத்தம் நான்கு கோடியே மூன்று லட்சம் செலவில் ஒரு நூலகம் உட்பட கட்டி முடிக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டது.இந்த மணி மண்டபங்களை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில். திருச்சி மணிமண்டபம் திறப்பு விழா நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே என் நேரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெரிய கருப்பன், மெய்ய நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 மணிமண்டபம் திறப்பு விழாவில் கலந்துகொண்டு மூன்று மணி மண்டபங்களையும் அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன், பழனியாண்ட்டி, சவுந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார் கதிரவன்,திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பொதுமக்கள் பல்வேறு சமுதாய கட்சிகள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு கூறுகையில்.., கடந்த ஆட்சியில் முடிக்கப்பட்டு இருந்தாலும் தன் கையால் திறந்து வைக்க வேண்டும் என்று தலைவர் அவர்கள் ஆசை. இன்று முத்தரையர் சிலை, தியாகராஜர் சிலை, பன்னீர்செல்வம் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள கூறினார். புதிய காவிரி பாலம் கட்டுவதற்கு அரசு ஆணை வந்துள்ளது. விரைவில் டெண்டர் விடப்பட்டு பணி துவங்கும் கிளாம்பாக்கம் போல் இருக்கக் கூடாது அனைவரும். விமர்சனம் செய்கிறார்கள். கிளாம்பாக்கம் போல பஞ்சபூர். பேருந்து நிலையம் விமர்சனத்திற்கு உள்ளாக கூடாது எனவும், வேலைகள் முடிந்த பின்பு திறக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார். தமிழகத்தில் சிறந்த ஆட்சியை ஜெயலலிதா செய்துள்ளார் என பிரதமர் மோடி பேசி உள்ளார். என்ற கேள்விக்கு.., பிரதமரை கேளுங்கள் என கூறிவிட்டு சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *