திருச்சி மாவட்ட AITUC சாலையோர தரைக்கடை சிறுகடை வியாபாரிகள் சங்கம் விரிவடைந்த கூட்டம் திருச்சி சோமரசம் பேட்டையில் உள்ள ஏஐடியுசி தலைமை அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் மேகராஜ் நடந்து முடிந்த வேலைகளை முன் வைத்து உரையாற்றினார்.

கூட்டத்தை AITUC மாவட்ட செயலாளர்களின் ஒருவரான முருகன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். பெண்கள் சங்க மாநில துணை ஒருங்கிணைப்பாளர் மருதாம்பாள் கட்டட சங்க தேசிய குழு உறுப்பினர் நிர்மலா மாதர் சங்க ஒன்றிய செயலாளர் ‌வித்யா ஒன்றிய பொருளாளர் ரஷ்யாபேகம் உள்ளாட்சி சங்க ஒன்றிய பொருளாளர் பாப்பாத்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் .

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஏக மனதுடன் நிறைவேற்றப்பட்டது. அதில் தரைக்கடை சிறுகடை வியாபாரிகளை கணக்கெடுத்து அந்தந்த பஞ்சாயத்து வாரியாக அரசு அடையாள அட்டை வழங்க வலியுறுத்தியும், தரைக்கடை சிறுகடை வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் மானியத்தில் கடன் வசதி செய்து கொடுக்க வலியுறுத்தியும், சோமரசம்பேட்டை சுற்று பகுதியில் இடம் தேர்வு செய்து தினசரி மார்க்கெட் வசதி வியாபாரிகளுக்கு ஏற்படுத்தி தர வலியுறுத்தி, 26.10.2023 அன்று இரட்டை வாய்க்காலில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது கூட்ட முடிவில் லட்சுமி நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *