திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐயாக பணிபுரிந்து வருபவர் பூமிநாதன் வயது 54 இந்நிலையில் இன்று விடியற்காலை 3.15 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனங்களில் ஆடுகளை தூக்கிக் கொண்டு வந்தவர்களை விரட்டி சென்று பிடிக்க முற்பட்டபோது ஆடு திருடர்களால் பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

படுகொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்எஸ்ஐ பூமிநாதன்.

அவரது உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு இருந்தது இந்நிலையில் அவரது உடலுக்கு மரியாதை செலுத்துவதற்காக திருச்சி சரக டி.ஐ.ஜி சரவண சுந்தர் மற்றும்போலீசார் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

உடல் வெளியே கொண்டு வருவதைக் கண்ட அவரது மகன் குகண்நாதன் கதறி அழுதார்.

அதனைத் தொடர்ந்து நிருபர்களுக்கு திருச்சி சரக டி.ஐ.ஜி சரவண சுந்தர் பேட்டி அறிக்கையில்-

எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் கொலை வழக்கில் குற்றவாளிகள் குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளது.ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. தொடர்ந்து விசாரணை நடைப்பெற்று வருகிறது.

நேற்று இரவு ஆடு திருடர்களை பிடிக்க எஸ்.எஸ்.ஐ பூமிநாதனுடன் இணைந்து மற்றொரு காவலரும் சென்றார்.அவர் வேறு வாகனத்தில் சென்றதால் வழி மாறி சென்று விட்டார்.

இறந்த எஸ்.எஸ்.ஐ குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிதி உதவியும்,குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருப்பதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்