திருச்சி மாவட்டம் , துறையூர் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ( வட்டார ஊராட்சி ) ஆகப் பணியாற்றி வருபவர் மணிவேல் . இவர் வண்ணாடு ஊராட்சியில் பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் திட்டப் பயனாளிகளிடம் விதிகளை மீறி பணம் பெற்றதாக சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ செய்தியினைத் தொடர்ந்து , விசாரணையின் அடிப்படையில் , வட்டார வளர்ச்சி அலுவலர் ( வட்டார ஊராட்சி ) மணிவேல் இன்று ( 18.5.2022 ) தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பதை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *