திருச்சி கருமண்டபம் பகுதியில் கொரோனா நோய் தோற்று அதிகம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு மருத்துவ தொகுப்பு வழங்கும் நிகழ்வின் தொடக்கவிழா இன்று நடந்தது. இந்த விழாவில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு, கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தடுப்பு மருத்துவ தொகுப்பினை சத்துணவு பணியாளர்களுக்கு வழங்கினர்.

பெல் நிறுவனத்தில்
கேட்ட போது நாங்களே வெளியில் இருந்துதான் ஆக்சிஜன் வாங்குவதாக தெரிவித்தனர் நாங்கள் உடனே நாட்டு மக்களை எப்படி காப்பாற்றுவது என கேட்டதை அடுத்து ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தேவையான நடவடிக்கை எடுங்கள் என்று தெரிவித்தோம்.
இப்போது ஆக்சிஜனை உற்பத்தி
பணிகள் நடந்து வருகின்றன இன்னும் ஒரு மாதத்தில் பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும் என தெரிவித்தார்… இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மாநகரச் செயலாளர் அன்பழகன் அரசு மருத்துவமனை சித்தா பிரிவு மருத்துவர் காமராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.