ஊரக வளர்ச்சித்துறை கணினி உதவியாளர்கள் சங்கத்தின் சார்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு இனசுழற்சி எழுத்து தேர்வு அடிப்படையில் பணி அமர்த்தப்பட்டு கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் தொகுப்பு ஊதியத்தில் கணினி உதவியாளராக பணிபுரிந்து வருகின்றனர். மேலும் 906 கணினி உதவியாளர்களை இளநிலை உதவியாளர்களாக பணி நிரந்தரம் செய்திட அரசாணை கடந்த 2017 ஆம் ஆண்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை முதன்மை செயலாளர் அவர்களால் வெளியிடப்பட்டது.

ஆனால் இன்னாள் வரை கணினி உதவியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இந்நிலையில் ஊரக வளர்ச்சி துறை கணினி உதவியாளர் சங்கத்தின் சார்பாக பணி நிரந்தரம் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கடந்த 1-ம் தேதி முதல் 11-ம் தேதி இன்று வரை தொடர் விடுப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டம் குறித்து ஊரக வளர்ச்சித் துறை கணினி உதவியாளர் தங்கத்துரை நிருபர்களுக்கு பேட்டியளிக்கில் கூறியதாவது:- 

ஊரக வளர்ச்சி துறை கணினி உதவியாளர்கள் கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறோம். மேலும் பணி நிரந்தர அரசாணை வெளியிடப்பட்டு 6 வருடங்களாக ஆகியும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. தற்போது பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகிம்சை வழியில் போராட்டம் நடத்தி வருகிறோம். எங்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றி தர கேட்டு கொள்கிறோம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *