திருச்சி மாவட்டம் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயின் மறுசுழற்சி பயன்பாடு திட்ட துவக்க விழா திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டறங்கில் நேற்று நடந்தது.முன்னதாக உணவு பாதுகாப்பு துறை திருச்சி மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு வரவேற்புரையாற்றினார் மாவட்ட வருவாய் அலுவலர் பழனி குமார் முன்னிலை வகித்தார்.
மேலும் ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெய் மாற்றுப்பொருள் தயாரிப்பதற்காக சமையல் எண்ணையை பயன்படுத்தும் உணவு நிறுவனங்களிடமிருந்து அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் கொள்முதல் செய்வதற்கான துவக்க விழா நடைபெற்றது இதில் கலந்து கொண்டவர்களுக்கு ரூகோ நிறுவனத்தின் டேங்க் மற்றும் பொருட்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு வழங்கினார். இவ்விழாவில் திருச்சி மாவட்டத்தில் உள்ள உணவகங்களின் உரிமையாளர்கள். உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.