திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 10,11,17,19,19,20, 21 மற்றும் 22க்குட்ட பகுதிகளுக்கு தலைமை நீர்யேற்றும் நிலையத்தில் இருந்து குடிநீர் விநியோக குழாய் மூலம் மேற்கண்ட வார்டுகளில் உள்ள பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தலைமை நீர்யேற்றும் நிலையத்தில் இருந்து மரக்கடை மற்றும் விறகுப்பேட்டை பகுதியில் செல்லும் மெயின் குடிநீர் விநியோக குழாயில் 500 எம்.எம் விட்டமுள்ள அளவில் குடிநீர் உந்து குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பழுதுகளை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது.
எனவே மேலசாசிப்பாளையம், கீழ காசிப்பாளையம், பந்தேகானத் தெரு, சுண்ணாம்புக்காரத் தெரு, பிரங்கிகுளத் தெரு, மணி மண்டப சாலை, பூலோக நாதர் கோயில் தெரு, கீழராணித் தெரு, ஜீன்னாத் தெரு, மன்னார் பிள்ளை தெரு, பாலக்கரை பகுதியான மதுரை ரோடு, வரகனேரி,எடத் தெரு வரகனேரி, தாராநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு 18.02.2023ந் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது .
எனவே பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்துமாறும் திருச்சி மாநகராட்சி ஆணையர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.