கரூர் மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த திருநங்கையான மணிமேகலை வசித்து வந்துள்ளார். திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா புதுக்குடி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ரமேஷ் வயது 25 கரூர் மாவட்டத்தில் வீடு கட்டும் கொத்தனார் வேலை செய்து வருகிறார். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருநங்கையான மணிமேகலை instagram மூலம் பழக்கம் ஏற்பட்டு அடிக்கடி நேரில் சந்தித்துள்ளனர். நாளடைவில் மணிமேகலை ரமேஷ் இருவரும் காதலித்து பலமுறை தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் திருநங்கையான மணிமேகலை பல ஆசை வார்த்தைகளை ரமேஷிடம் கூறி இலட்சக்கணக்கில் பணம் வாங்கி உள்ளார். மேலும் கூலித் தொழிலான ரமேஷ் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருவோம் என்ற நம்பிக்கையில் பணத்தை கொடுத்து அவருடன் பலமுறை தனிமையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் ரமேஷ் திருநங்கை மணிமேகலை செல்போனை திருநங்கை காதலிக்கு தெரியாமல் பார்த்த போது பல ஆண் நண்பர்களுடன் தனிமையில் இருந்து வீடியோ எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வந்துள்ளார்.
அதன் பிறகு தான் ஏமாற்றப்பட்டது உணர்ந்து தன்னிடம் வாங்கிய பணத்தை கொடு என திருநங்கை மணிமேகலிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் தர மறுத்துள்ளார். மேலும் திருநங்கையான மணிமேகலை 4 வருடத்திற்கு முன்பு திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள ஆர்த்தி என்கிற திருநங்கையை அம்மாவாக ஏற்றுக் கொண்டு திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை கொள்ளிடம் பாலம், அய்யன் வாய்க்கால் இடையே பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். காதலி திருநங்கை மணிமேகலையை ரமேஷ் பலமுறை தொடர்பு கொண்டும் போனை எடுக்காமல் தொடர்பை துண்டித்துள்ளார். இதனால் வேறொரு நம்பரில் இருந்து திருநங்கையான மணிமேகலை தொடர்பு கொண்டு எனக்கு பணம் வேண்டாம் நாம் ஒன்றாக வாழ்வோம் என கூறியுள்ளார். அதற்கு திருநங்கை மணிமேகலை சம்மதம் தெரிவித்து நான் தற்போது மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ளேன், அங்கே வாருங்கள் என அழைத்துள்ளார்.இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி இரவு திருநங்கையான மணிமேகலை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வழக்கம்போல் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலை கொள்ளிடம் பாலத்திலிருந்து அய்யன் வாய்க்கால் வரை பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அங்கு வந்த திருநங்கை மணிமேகலையின் காதலன் ரமேஷ் ஆசையாக பேசி மறைவான முட்புதர் இடத்திற்கு கொண்டு சென்று அங்கு இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்தனர். அப்போது ரமேஷ் தான் கொடுத்த பணத்தை எப்போது தருவாய் என கேட்டுள்ளார் அதற்கு என்னால் பணம் தர முடியாது என திருநங்கை மணிமேகலை கூறியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த ரமேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் சராமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார். இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் கொலைக்கு பயன்படுத்திய கத்தி சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றி, கைரேகை மற்றும் மோப்பநாய் உதவியுடன் விசாரணை செய்தனர். மேலும் டிஎஸ்பி அஜய்தங்கம் தலைமையில் ஆய்வாளர்கள் விதுன்குமார், சுமதி உள்ளிட்ட போலீசார்கள் கொண்ட 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று கும்பகோணம் அருகே மறைந்திருந்த ரமேஷை தனிப்படை போலீசார் கைது செய்து திருச்சி நீதிமன்ற நீதிபதியிடம் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இன்ஸ்டாகிராம் பழகி திருநங்கை காதலித்த இளைஞரை பல லட்சம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றிய திருநங்கையை குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.