தஞ்சை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இருந்து இன்று விமான மூலம் திருச்சி விமான நிலையம் வந்தார். அவரை அமைச்சர்கள் ரகுபதி, அன்பில் மகேஷ், மெய்ய நாதன், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், திமுக தொண்டர்கள் என பலர் வரவேற்றனர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி விமான நிலையம் வந்தபோது அவரை தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்று காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்று அந்த போட்டியில் கலந்து கொள்ள உள்ள திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஷேக் அப்துல்லா, ராஜேஸ்வரி, பாலமுருகன் ஆகிய மூவரும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். தொடர்ந்து ‘பளுதூக்கும் போட்டிகளில் வெல்லும் வீரர்களுக்கு மத்திய அரசு துறைகளில் பணி வழங்கப்படுகிறது. அதே போன்று தமிழக அரசின் அரசு துறைகளில் பணி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.இது குறித்து பேசிய வீரர்கள், நாங்கள் வைத்த கோரிக்கையை அமைச்சர் கேட்டு விட்டு கோரிக்கையை நிறைவேற்றது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். என அவர்கள் தெரிவித்தனர். இவர்களில் ஷேக் அப்துல்லா ஏற்கனவே காமன்வெல்த் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.