திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி 1997 ஆண்டு துவங்கப்பட்டது. இப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 75 மாணவர்கள் 72 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஒருவரும், பட்டதாரி ஆசிரியர்கள் 5 பேரும் ,இடைநிலை ஆசிரியர்கள் இருவரும் ,சிறப்பு ஆசிரியர்களாக உடற்கல்வி மற்றும் தையல் என இரண்டு ஆசிரியர்களும் ,அலுவலக பணியாளர்கள் இருவர் என மொத்தம் 15 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளிகளில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றும் பழனிச்சாமி என்ற சமூக அறிவியல் ஆசிரியர் காலையில் புல்லட் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு வந்ததும், பள்ளி காலை 10 மணிக்கு துவங்கிய உடன் அலுவலக வருகை பதிவேட்டில் கையொப்பம் இட்டுவிட்டு அலுவல் பணி எனக்கூறி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் திருச்சி மற்றும் மாவட்ட கல்வி அலுவலகம் லால்குடி செல்வதாக பள்ளி தலைமை ஆசிரியரிடம் கூறிவிட்டு சென்று வருகிறார் . இவரது பாடங்களை பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாடம் நடத்த மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோரிடம் அனுமதி பெறாமல் ரூபாய் 3000 சம்பளத்திற்கு ஆசிரியர் அல்லாத ஒரு பெண்ணை கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவ மாணவிகளுக்கு பாடம் நடத்த ஆசிரியர் பழனிச்சாமி தன்னிச்சையாக அனுமதி வழங்கியுள்ளார். இவரது செயலை கண்டித்து அப்பகுதி மக்கள் பள்ளி தலைமை ஆசிரியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி யிடம் கேட்டபோது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தியாளர்களிடம் கூறினார். பிரச்சினைக்குரிய ஆசிரியர் பழனிச்சாமி இதற்கு முன்பு மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலி அரசு உயர்நிலை பள்ளியில் இதேபோன்ற குற்றச்சாட்டுகளால் அந்த கிராம மக்கள் அவரை கண்டித்து போராட்டம் நடத்தியதன் வாயிலாக தாளக்குடி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *