திருச்சி மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை சார்பில், மணிகண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 20 அரசு, ஊராட்சி ஒன்றிய பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு கலைத்திறன் போட்டிகள் திருச்சி சோமரசம்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இப்போட்டிகளை மணிகண்டம் ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் ஜெயலட்சுமி முன்னிலையில், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி துவக்கி வைத்தார். கலைத்திறன் போட்டிகள் பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது. ஓவியம், நடனம், பாட்டு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதுதல், கவிதை வாசித்தல், பேச்சுப்போட்டி, நாடகப் போட்டிகள் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்கள் மற்றும் நடுவர்களாக முன்னாள் ஆசிரியர் பயிற்சி பள்ளியின் முதல்வர் சிவக்குமார், முன்னாள் பாரத மிகு மின் நிறுவனத்தின் மேலாளர் சுந்தரம்,

சினேகம் அறக்கட்டளையின் நிறுவனரும், தன்னார்வ சேவை சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவருமான பால் குணா லோகநாத் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்போ போட்டிகள் 6 7 8 ஆகிய வகுப்பறை சார்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்