திருச்சி பொன்மலை தங்கேஸ்வரி நகரில் உள்ள மஸ்ஜிதே நூர் பள்ளிவாசல் தலைவர் அப்துல் கப்பார், மற்றும் நிர்வாகிகள் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள மத்திய மண்டல ஐஜி அலுவலகத்தில் இன்று மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது….

திருச்சி மாவட்டம் பொன்மலை பகுதி தங்கேஸ்வரி நகரில் உள்ள மஸ்ஜிதே நூர் பள்ளிவாசலில் அப்துல் முபாரக் என்பவரின் மகன் முகமது இப்ராஹிம் சாதிக் இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை இமாமாக (மத குருவாக) பணிபுரிந்து வந்தார். அந்த பள்ளிவாசலின் மூலம் வெளிநாடுகளுக்கு சென்று நன்கொடை வசூல் செய்தார், அதில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். மேலும் தற்பொழுது நன்கொடை வசூல் செய்த பணத்தை வைத்து  தனிப்பட்ட முறையில் மஸ்ஜித் தாருஸ் ஸலாம் டிரஸ்ட் மற்றும் அவருடைய பெயரில் பள்ளிவாசல் கட்டுவதற்கு முயற்சி செய்து வருகின்றார்.

இதனை தடுக்க வேண்டும் எனவும் மேலும் எங்கள் பள்ளிவாசலில் வசூல் தொகை பணத்தை மதிப்புமிக்க ஆவணத்தையும் எங்களிடம் கொடுக்க வேண்டும். மேலும் கணக்கு விவரங்களை  முறையாக  பள்ளிவாசல் நிர்வாகத்திடம் காண்பிக்கவில்லை. முகமது இப்ராஹிம் சாதிக் வசூல் செய்த கணக்கு புக்கிலும் நன்கொடை ரசீதுகள் இடையில் கிழிக்கப்பட்டு உள்ளது. இதனை கேட்டதற்கு பள்ளிவாசல் நிர்வாகிகளை கெட்ட வார்த்தைகளால் பேசி உங்களிடம் கணக்குகளை காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்றும் நான் நினைத்தால் உங்கள் நிர்வாகம் அனைத்தையும் காலி செய்து விடுவேன் என்றும் நான் வெளிநாடுகளில் பல நபர்களிடம் தொடர்பு வைத்து உள்ளேன். நான் ஒரு வார்த்தை சொன்னால் மொத்தமாகவே உங்களை காலி செய்துவிடுவார்கள் என்று மிரட்டி வருகிறார். மேலும் அவரை நாங்கள் கடந்த 2020ஆம் ஆண்டு மத குருமார் பதவியில் இருந்து நீக்கிவிட்டோம். அவர் எங்களுக்கு செய்த துரோகத்தை எண்ணி முஸ்லிம் பொதுமக்களும் எங்கள் நிர்வாகிகளும் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வருகிறோம். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து நூர் பள்ளிவாசலுக்கு சேர வேண்டிய தொகையை பெற்று தருமாறும் அவர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் போது வழக்கறிஞர் மில்லர், மஸ்ஜிதே நூர் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 50 க்கும் மேற்பட்டோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *