திருவண்ணாமலை தாலுகா பண்டிதப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (31) என்பவர் அதே கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 16 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் சீண்டல் கொடுத்து வந்துள்ளார். தன்னை காதலிக்க வற்புறுத்தியும் உள்ளார். இதுமட்டுமின்றி மாணவியிடம் ‘நீ காதலிக்கவில்லை என்றால் மதிப்பெண் குறைத்து விடுவேன்.தேர்ச்சி பெற வைக்க மாட்டேன்’ என மிரட்டியும் உள்ளார். இதற்கிடையில் ஆசிரியரை பள்ளியில் இருந்து பள்ளி நிர்வாகம் திடீரென நீக்கியுள்ளது, ஆனால் சம்பந்தப்பட்ட மாணவியை தொடர்ந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொடர் வன்கொடுமையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே தனியார் பள்ளி ஆசிரியருக்கு கடந்த ஆண்டு திருமணமாகி 9 மாத பெண் குழந்தையும் உள்ளது. ஆனால் , அதனை மாணவியிடம் மறைத்து உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தைகள் கூறி தொடர்ச்சியாக கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதன் காரணமாக அந்த மாணவி தற்போது 6 மாத கர்ப்பமாகியுள்ளார். தனக்கு நடந்த கொடுமையை தன்னுடைய பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய ஆய்வாளர் ஆசிரியரை போக்சோ சட்டத்த்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கைதான ஆசிரியர் பள்ளியில் பணியாற்றியபோது வேறு எதாவது மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீப நாட்களாக பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பலரும் வலியுறுத்தி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.