தமிழ்நாடு அரசு எஸ்சி எஸ்டி அலுவலர் சங்கம், ஆசிரியர் நலச்சங்கம், பணிபுரிவோர், ஓய்வு பெற்றோர் மற்றும் அரசின் அனைத்து துறை ஒருங்கிணைப்பு சங்கத்தின் திருச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கருத்தரங்கம் திருச்சி அருண் ஹோட்டலில் உள்ள கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு மாநில பொதுச் செயலாளர் முத்துக்குமரன் வரவேற்புரை ஆற்றிட. நிறுவனத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார் கோவை மாநகராட்சி சானிட்டர் அலுவலர் பரமசிவம் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேருரை ஆற்றினார்.
மாநில நிர்வாகிகள் ஆறுமுகம் சீனிவாசன் சிவராஜ் ஜெயபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்த ஒருங்கிணைப்பு கருத்தரங்கு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:- மத்திய மாநில அரசிலுள்ள அனைத்து துறை ஊழியர்களுக்கும் பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த கோரியும், எஸ்சி எஸ்டி பிரிவினர்களுக்கு இட ஒதுக்கீடு கொள்கையில் ஏற்பட்டுள்ள பின்னடைவு காலி பணியிடங்களை கால வரையறை நிர்ணயம் செய்து விரைந்து நிரப்ப கோரியும்,
புதிய கல்விக் கொள்கையில் எஸ்சி எஸ்டி பிரிவு மக்களுக்கு எளிமையாக திட்டம் வகுத்தல் அரசு பள்ளிகளுக்கு இணையாக அரசு உதவி பெறும் பகுதி நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு சலுகைகள் வழங்க கோரியும், மத்திய மாநில அரசுகளின் அனைத்து துறை தற்காலிக நியமனங்களிலும் தனியார் துறை வேலைவாய்ப்பு எஸ்சி எஸ்டி பிரிவு மக்களுக்கு இட ஒதுக்கீடு கொள்கை அமுல்படுத்த கோர்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இறுதியாக மாநில பொருளாளர் நாகேந்திரன் நன்றி உரை கூறினார்.