திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஜாக்டோ ஜியோ சார்பாக தமிழக முதலமைச்சர அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பால்பாண்டி, உதுமான் அலி, சந்திரசேகரன் ஆகியோர் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…..

இந்த ஆர்ப்பாட்டத்தில் 2000ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பங்குபெற்று பழைய ஓய்வு திட்டம் அமல்படுத்துதல் இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை கலைதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்..

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளரும், ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்ட குழு உறுப்பினருமான நீலகண்டன், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைச் செயலாளர் நாகராஜ்,தமிழ்நாடு ஆசிரியர் மன்றத்தின் மாநில மகளிர் அணி செயலாளர மதனா, உள்ளிட்ட ஏராளமான ஆசிரியர் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்ட உரையாற்றினர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்