திமுக ஆட்சியில் தமிழகத்தில் போதைப் பொருட்கள் அதிகரித்துள்ளதை கண்டித்தும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன உரை ஆற்றுவதற்காக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திருச்சி வந்தார். முன்னதாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருந்த அமமுக பொது செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் :

அமமுகவின் நிபந்தனையற்ற ஆதரவை நான் பாஜகவிற்கு கொடுத்திருக்கிறேன் – நரேந்திர மோடி தான் பிரதமராக போகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். நாங்கள் unconditional ஆக தொடர்ந்து நாங்கள் பா.ஜ.கவிற்கு ஆதரவு கொடுத்து வந்தோம்.நாங்கள் எத்தனை இடத்தில் போட்டியிடுகிறோம்? எத்தனை தொகுதி எங்களுக்கு கொடுக்கிறார்கள் என்பதெல்லாம் முக்கியமல்ல . குறிப்பிட்ட சின்னத்தில் தான் நிற்க்க வேண்டும் என்று பாஜக போன்ற எந்த கட்சிகளும் எங்களுக்கு வற்புறுத்த வில்லை. நிபந்தனையற்ற ஆதரவை நாங்கள் பாஜகவிற்கு தருகிறோம் என்பதை நாங்கள் தெரிவிக்கின்றோம்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும். கிருஷ்ணா ரெட்டி உள்ளிட்ட பாஜகவை சேர்ந்த தலைவர்கள் நன்கு அறிமுகமானவர்கள் – அடுத்து அடுத்து பேச்சுவார்த்தை இருக்கும். அமமுக பா.ஜ.கவிற்கு ஆதரவு. அதிகாரப்பூர்வமாக அண்ணாமலை இன்று என்னிடம் தொடர்பு கொண்டார். இந்த காலகட்டத்திற்கு தமிழ்நாட்டிற்கு எது தேவையோ அதன் அடிப்படையில் நாங்கள் கூட்டணி அமைத்திருக்கிறோம். அம்மா இல்லை என்றாலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அவர்களது லட்சியத்தை தாங்கி செல்கிறோம் – எங்களுடைய நிலைப்பாடு தற்போது பாஜகவிற்கு நிபந்தனை அற்ற ஆதரவை தருகிறோம் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *