பாரதிய ஜனதா கட்சி சார்பில் கரூர் மாவட்டத்தில் நடைபெறும் என் மண் என் மக்கள் நடைப்பயணத்தில் பங்கேற்பதற்காக இலங்கையில் இருந்து விமான மூலம் சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு இன்று மாலை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வந்தார் அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுகையில் அவர் கூறியதாவது.

இலங்கையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய அரசு சார்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். குறிப்பாக நேற்று நாம் 200 நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் இலங்கை நாட்டின் அரசு அதிகாரிகள், தலைவர்கள் மற்றும் இந்திய நாட்டின் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் இந்திய அரசு சார்பாக ஏற்கனவே இலங்கையில் மலைப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு 4000 வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து புதிதாக 10 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் மலைப்பகுதியில் படிக்கும் குழந்தைகளின் அறிவுத்திறனை ஆற்றலை மேம்படுத்த கம்ப்யூட்டர் நாலெட்ஜ் வளர்வதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது.

தற்போது 3 மாதங்களில் பொருளாதாரம் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. குறிப்பாக இலங்கையில் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டபோது இந்திய அரசு பல்வேறு விதமாக உதவி செய்து தோள் கொடுத்துள்ளது இந்த நன்றியை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பாஜக அதிமுக இடையே கள்ளத்தொடர்பு உள்ளது என முதல்வர் மு க ஸ்டாலின் கூறுகிறார் என்ற கேள்வி??? பதில் அளித்த அண்ணாமலை பேசியது.. கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு செய்த சாதனைகளை எடுத்து மக்கள் மத்தியில் வெளிப்படையாக தெரிவித்து வாக்கு சேகரிப்போம். அதே சமயம் திமுக அரசு பதவி ஏற்றில் இருந்து 30 மாதங்களாக என்ன தவறு செய்தார்கள் அவர்கள் அறிவித்த தேர்தல் அறிக்கையில் இதுவரை எந்த திட்டத்தையும் முழுமையாக செயல்படுத்தவில்லை என மக்கள் மத்தியில் எடுத்துரைப்போம் என்றார்.

மேலும் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக செய்த சாதனைகளை எடுத்துரைத்து அடுத்த ஐந்து ஆண்டுகளை மக்களிடமிருந்து கேட்டு பெறுவோம் அதுவே எங்களது லட்சியம் ஆகும். தமிழ்நாட்டில் தான் கொடியேற்றினால் கைது செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது. பாஜக நிர்வாகிகள் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் கொடியேற்றினாலோ அல்லது மற்ற அரசியல் கட்சி கொடி ஏற்றிய இடத்தில் புதிதாக கொடியேற்றினாலோ அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. இதற்குக் காரணம் பாஜகவை கண்டு திமுக அஞ்சுகிறது என்பதே முக்கியமானதாகும். தமிழ்நாட்டில் திமுக அரசு தொழில் முனைவோர்களுக்கு எதிராக உள்ளது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் உரிய நேரத்தில் முடிவு எடுப்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *