தமிழக பாஜகவின் ஓ.பி.சி அணியின் மாநில செயலாளரான சூரியா சிவா சமீபத்தில் தனியார் youtube சேனலுக்கு அளித்த பேட்டியில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சரை விமர்சனம் செய்து பேசியதோடு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சரின் மறைந்த தம்பி ராமஜெயம் குறித்தும் பல விமர்சனங்களை முன் வைத்துள்ளார். ராமஜெயம் கொலை செய்யப்பட்ட வழக்கு தற்போது விசாரணையில் இருந்தாலும் குற்றவாளிகளை ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது. கொலை செய்தவரை கண்டுபிடித்து தண்டனை வாங்கி தரும் அளவிற்கு ராமஜெயம் தியாகி அல்ல என்றும் பேசியுள்ளார்.

மேலும் மறைந்த ராமஜெயம் அடாவடியானவர் என்றும் அவர்களுடைய வளர்ச்சியில் தான் தற்போது அமைச்சர் கே.என்.நேரு வாழ்ந்து வருகிறார் என்றும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்து திருச்சி மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண் மத்திய மண்டல காவல்துறை தலைவரிடம் இன்று புகார் மனு அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்