திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கல்லக்குடி சுங்கச்சாவடி அருகில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் சரவணன் தலைமையில் போலீசார் வெங்கடேஷ், மதுமிதா, ராமகிருஷ்ணன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பாஜக கொடி கட்டிய காரில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா இந்திரா காலனி பகுதியை சேர்ந்த ஜெகநாதன் என்பவரும் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா மூணான்பட்டி பகுதியை சேர்ந்த சிவலிங்கம் என்பவரும் திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

இந்த காரை மறித்து தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். இச்சோதனையின் போது உரிய ஆவணம் இல்லாமல் ரூபாய் 75 860 பணம் மற்றும் பிரதமர் மோடி உருவம் பதித்த கவர் இருந்தது. இதை உடனடியாக தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து லால்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியர் லோபோ, முதுநிலை வருவாய் ஆய்வாளர் அப்துல்காதர் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *