தமிழகத்தில் மதக்கலவரத்தை உண்டாக்க வேண்டும் என்று திட்டமிட்டு பரப்புரை செய்து வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மாநில மாவட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ் நாடு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் திருச்சி மண்டல தலைவர் அமீர் பாஷா மற்றும் நிர்வாகிகள் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் ஐஜி பாலகிருஷ்ணனிடம் புகார் அளித்தனர்.

 

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசம் முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வரும் சமூக இயக்கமாகும். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்ட தஞ்சை மாணவி லாவண்யா வழக்கில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மாநில மாவட்ட நிர்வாகிகள் தகவல் மற்றும் செய்திகளை தவறாக சித்தரித்து பொய்யான ஒரு செய்தியை பிரிவினைவாத செய்திகளோடு தொடர்புபடுத்தி சிறுபான்மை சமூகத்தினர் மீது வெறுப்புணர்வு ஏற்படும் விதமாக அவதூறு பரப்பி கூட்டு சதி செய்து உள்நோக்கத்தோடு செய்திகளை திரித்து தமிழகம் முழுவதும் மதமோதலை உண்டாக்க வேண்டும் என்று திட்டமிட்டு பரப்புரை செய்து வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மாநில மாவட்ட நிர்வாகிகள் மீது கைது நடவடிக்கை மேற்கொண்டு பொது அமைதியை காக்குமாறு திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணனிடம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருச்சி மண்டல தலைவர் அமீர் பாஷா, நிர்வாகி முஜித் மற்றும் நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்