திருச்சி திருவெறும்பூர் அருகே துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் ஏ.ஆர்.எஸ் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சி துவாக்குடி மண்டலம் சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமிற்கு மண்டல தலைவர் விஜய் ஆனந்த் தலைமை தாங்கினார்.இதில் சிறப்பு விருந்தினராக திருச்சி பாராளுமன்ற இணை அமைப்பாளரும் மாநில செயற்குழு உறுப்பினருமான டாக்டர் ஆர்ஜி ஆனந்த் கலந்து கொண்டு அங்கு வந்திருந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார்.

மேலும் 12 மருத்துவர்கள் 3 செவிலியர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வசதியுடன் நடத்தப்பட்ட இம்மருத்துவ முகாமில் 300க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்து மாத்திரைகள் டானிக் வகைகள் மற்றும் பிசியோதெரபி கருவிகள் இலவசமாக வழங்கப்பட்டன. உள்நோயாளியாக மருத்துவமணையில் தங்கி அவசரசிகிச்சை பெறவேண்டிய கட்டாயத்தில் இருந்த பயனாளிகள் 8 பேரை கண்டறிந்த டாக்டர் RG.ஆனந்த் தனது சொந்த செலவில் அவர்களை தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.

இந்த மருத்துவ முகாமில் முன்னால் பாஜக மாநில பட்டியல் அணி செயலாளரும் மாவட்ட செயற்குழு உறுப்பினருமான இந்திரன், தரவு தர மேலாண்மை பிரிவு மாநில செயலாளரும் திருவெறும்பூர் சட்டமன்ற இணை அமைப்பாளருமான என்.எஸ்.இ சிட்டிபாபு, அரியமங்கலம் மண்டல் தலைவர் சண்முக வடிவேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *