திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்த பாஜக செயற்குழு உறுப்பினர் தண்டபாணி, இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் முன்னாள் ராணுவ வீரர் பாலமுருகன் இந்த இருவருக்கும் கடந்த சில மாதங்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பாக குடும்ப சண்டை காரணமாக பாலமுருகனின் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதற்கு காரணம் தண்டபாணி குடும்பம் தான் என நினைத்து இன்று அதிகாலை அவரது வீட்டின் முன் நின்று தண்டபாணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது ஆத்திரமடைந்த முன்னாள் ராணுவ வீரர் பாலமுருகன் அரிவாளால் பாஜக நிர்வாகி தண்டபாணியின் தலை மற்றும் கை உள்ளிட்ட இடங்களில் வெட்டியுள்ளார் இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் மேலும் அரிவாளால் வெட்டிய ராணுவ வீரர் பாலமுருகனை அரியமங்கலம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த வெட்டு சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்