திருச்சியில் இன்று 01.01.2024 இரவு 20.00 மணி முதல் விமான நிலையம் வழியாக புதுக்கோட்டை செல்லும் செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் ஜி-கார்னர், டி.வி.எஸ்.டோல்கேட் மேம்பாலம், மன்னார்புரம் மேம்பாலம், எடமலைப் பட்டிபுதூர் பைபாஸ் சந்திப்பு, விராலிமலை வழியாக புதுக்கோட்டை செல்லவேண்டும்.

அதேபோல் 02.01.2024 காலை 07.00 மணி முதல் சென்னை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புதுக்கோட்டை செல்லும் அனைத்துப் பேருந்துகளும் டி.வி.எஸ்.டோல்கேட், மன்னார்புரம், எடமலைப்பட்டிபுதூர் பைபாஸ் சந்திப்பு, விராலிமலை வழியாக புதுக்கோட்டை செல்லவேண்டும்.

திருச்சி விமான நிலையத்திற்கு செல்லும் கட்சியினரின் வாகனங்கள் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களை வரவேற்க விமான நிலையத்திற்கு வருகை தரும் கட்சித் தொண்டர்களின் வாகனங்கள் 02.01.2024 காலை 09.00 மணி வரை மட்டுமே புதுக்கோட்டை சாலையில் செல்ல அனுமதிக்கப்படும். குண்டூர், மாத்தூர், பாரதிதாசன் பல்கலைக்கழகம் செல்லும் கட்சியினரின் வாகனங்கள் டி.வி.எஸ்.டோல்கேட், மன்னார்புரம், எடமலைப்பட்டிபுதூர் பைபாஸ் சந்திப்பு, புதியசுற்றுச்சாலை, கும்பக்குடி வழியாக செல்லவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *