திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தமிழக முதல்வரால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்ட நீதிக் கட்சியின் வைரத்தூண் என்று அழைக்கப்படும் சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் மணிமண்டபத்தில் தமிழ்நாடு பார்க்கவ குல சங்கம் சார்பில் பார்க்கவ குல சங்கம் மாநில தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அருகில் சர்.ஏ.டி.பன்னீர் செல்வத்தின் பேரன்கள் ரமேஷ் என்கிற இம்மானுவேல், மார்ட்டின், முன்னாள் எம்எல்ஏ வெங்கடாசலம், மாநில பொதுச் செயலாளர் காசி விஸ்வநாதன், மாநில பொருளாளர் பத்மநாபன்,திருச்சி மாவட்ட தலைவர் ஆர்.டி.எம். சந்திரசேகர், திருச்சி மண்டல தலைவர் தங்கராஜ்,மாநில இணைச்செயலாளர் செங்குட்டுவன்,ஆனந்த் மாணிக்கம்,மாநில இளைஞரணி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்து நீதிக்கட்சியின் வைரத்தூண் என அழைக்கப்படும் சர்.ஏ.டி.பன்னீர் செல்வத்தின் மணிமண்டபத்தில் அவரது முழு உருவ சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பார்க்கவ குல சங்கம் மாநில தலைவர் பாண்டுரங்கன் பத்திரிக்கை யாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

நீதிக் கட்சியின் வைரத்தூண் சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்களுக்கு மணிமண்டபம் கட்டிய தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் அதே போல் நீண்ட காலமாக தமிழக அரசுக்கு எங்களின் கோரிக்கையான சட்டநாதன் கமிஷனில் இருந்து பார்க்கவ குல சமுதாயத்தை மோஸ்ட் பேக்வேர்ட் கமிட்டியாக எங்களை சேர்க்க வேண்டும் ஏனென்றால் சிறுபான்மை மக்கள் தொகை குறைவாக இருப்பதாலும், நிறைய பேர் விவசாயத்தை சார்ந்து இருப்பதால் தற்போதையுள்ள அரசு எங்கள் கோரிக்கையை ஏற்று MBC யாக மாற்றி தர வேண்டும், அதேபோல் எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு வருகிற பார்லிமென்ட் உறுப்பினருக்கு சீட் வழங்கவும் கோரிக்கை விடுத்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்