பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் அத்து மீறல்களை கண்டித்தும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவுகரம் நீட்டும் விதமாகவும் திருச்சி மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் பாலக்கரை ரவுண்டானா அருகில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன் தலைமையில் நடைபெற்றது. அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். வஹ்ததே இஸ்லாமி ஹிந்த் பொறுப்பாளர் அப்துல்லாஹ் திருக்குர்ஆன் வசனங்களை ஓதி நிகழ்வை துவக்கி வைக்க, JAQH மாவட்ட தலைவர் முகம்மது வரவேற்புரை ஆற்றினார். அகில இந்திய முஸ்லிம் லீக்-கின் மாநில தலைவர் காஜா மைதீன் துவக்க உரை நிகழ்த்தினார்.

இப்பொதுக் கூட்டத்தில் இஸ்லாமிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹபீபுர் ரஹ்மான்,துணை ஒருங்கிணைப்பாளர்கள் அப்துல்லா ஹஸ்ஸான் பைஜி,உதுமான் அலி, தமஜக மாவட்ட செயலாளர் ராயல் சித்திக்,ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் அழைப்பாளர் ரஃபியுல்லாஹ், சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் பீர் முஹம்மது ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். நிறைவாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் அப்துல் ஹமீது,தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் கே.எம்.சரீப் மற்றும் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநில தலைவர் ஹைதர் அலி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

இந்த பொதுக்கூட்டத்தில் இஸ்ரேலுக்கு இந்தியா அளித்துள்ள ஆதரவை திரும்பப் பெற வேண்டும் எனவும்,இஸ்ரேல் பிரதமர் நெதன் யாகுவை உடனடியாக போர் குற்றவாளியாக ஐநா சபை அறிவிக்க கோரியும் மற்றும் ஐநா சபையில் உள்ள நாடுகளை இந்திய அரசு ஒன்றிணைத்து பாலஸ்தீனத்தில் அமைதி ஏற்படுத்திட முயற்சி செய்ய வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிறைவாக தமஜக மாவட்ட துணைச் செயலாளர் அபுபக்கர் சித்தீக் நன்றி உரையாற்றினார். இந்த பொதுக்கூட்டத்தில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *