திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள ஈ.வெ.ரா பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது.இதில் ஆங்கிலத் துறையில் எம் ஏ படித்த மாணவி ஆங்கிலத் துறையின் தலைவரும், பேராசிரியருமான ஜெயக்குமார் என்பவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு துன்புறுத்தல்கள் செய்ததாக குற்றச்சாட்டை  முன் வைத்துள்ளார். இந்நிலையில் மாணவி திருச்சி அரசு மருத்துவமனையில் மனநல சிகிச்சை பெற்று வரும் சூழலில், முதலமைச்சரின் தனி பிரிவிற்கு இது தொடர்பாக புகார் ஒன்றை கடந்த ஜூன் மாதம் அனுப்பியுள்ளார்.

புகாரைத் தொடர்ந்து முதல்வரின் தனிப் பிரிவிலிருந்து இப்புகார் மீது உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென கல்லூரி முதல்வருக்கு கடிதம் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் இதற்கான குழு அமைத்து விசாரணை நடத்தியதாகவும் விசாரணையில் ஆங்கிலத்துறை பேராசிரியர் ஜெயக்குமார் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறி, கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு விசாரணை அறிக்கையை கடந்த 03.08.2022ம் தேதி தாக்கல் செய்துள்ளார். இவர் மீதுள்ள குற்றச்சாட்டு உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு வழக்கு தொடுக்கப்படும் என தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்