வரும் மே 5ம் தேதி ஈரோட்டில் வணிகர் தினம் உரிமை முழக்கம் மாநாடு நடைபெற உள்ளது . இது தொடர்பான திருச்சி மண்டலத்தற்கு உட்பட்ட திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளடக்கிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மண்டலத் தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையில் திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு வனிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரமராஜா மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வணிகர்கள் சங்கத்தின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரமராஜா பேசியது… 

பல்வேறு சட்ட பிரச்சனைகள் குறிப்பாக தென் மாநிலங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்ட செஸ் வரி இது குறித்து முதலமைச்சருக்கு கொண்டு சென்று அதனை திரும்ப பெற்றுக் கொண்டதற்காக நன்றி தெரிவித்தார். மேலும் நகராட்சி, உள்ளாட்சி, பேரூராட்சி ஆகிய இடங்களில் கடைகள், பேருந்து நிலையங்களில் இடித்து கட்டப்படும் கடைகள் மீண்டும் அதே கடைகளை நியாயமான வாடகை நிர்ணயம் செய்து வியாபாரிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் . பல்வேறு இடங்களில் மார்க்கெட்டுகள் இடிப்பதாகவும், அப்புறப்படுத்துவதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது. எனவே, அந்த இடங்கள் கட்டப்பட்டு மீண்டும் அதே வியாபாரிகளுக்கு முன்னுரிமை கொடுத்து வழங்க வேண்டும். இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் பங்கற்கின்றனர்.

பல்வேறு சோதனைகளில் சென்று கொண்டிருக்கிறோம். அவைகளை அமைச்சர்கள் மற்றும் முதல்வருக்கு மாநாடு மூலம் அவர்களுக்கு கொண்டு செல்ல இருக்கிறோம். மேலும் பணிகள் வெகு சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த மாநாடு 40வது மாநில மாநாட்டுக்கு பிறகு தமிழகத்தில் வணிர்களுக்கு ஒரு பாதுகாப்பு வளையத்தை மத்திய, மாநில அரசுகள் அமைத்து தர வேண்டும் என்ற பிரகடன தீர்மானத்தை எடுக்க இருக்கிறோம் என தெரிவித்தார். மேலும் பால் தட்டுப்பாடு என்பது பொதுமக்கள், வியாபாரிகள் மத்தியிலும் விலகி இருந்தால் அதனை சீர் செய்வதற்கு அந்தத் துறையின் அமைச்சரை சந்தித்து சாமானிய மக்களும் தடையில்லாமல் ஆவின் பால் கிடைப்பதற்கு தமிழ்நாடு வணிகர் பேரமைப்பு வலியுறுத்தும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *