தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் பூரா.விசுவநாதன் தலைமை தாங்கினார். இந்த செயற்குழு கூட்டத்தில் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக் கோரி பிப்ரவரி 10ஆம் தேதி அன்று தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம் நடத்துவது எனவும், இலவச விவசாய மின் இணைப்பில் மின்மோட்டார் பொருத்துவதை தமிழக அரசு கைவிட வேண்டும், மாவட்டத்திலுள்ள 25 ஆயிரம் யூனியன் ஏரிகளையும் 14,000 ஆயிரம்பொதுப்பணித்துறை ஏரிகளையும் ஆய்வுசெய்து நவீனப்படுத்த வேண்டும் தடுப்பணைகளை அதிகப்படுத்த வேண்டும், மழையால் பாதிக்கப்பட்ட மாநில நெடுஞ்சாலைகள் சீரமைக்க வேண்டும். பயிர்க் கடன் நகைக் கடன் கட்ட வலியுறுத்தி நெருக்கடி கொடுப்பது மாவட்ட ஆட்சியர் அவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட 5 தீர்மானங்கள் இக்கூட்டத்தின் வாயிலாக நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.