பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட நெசவாளர் அணி பிரிவு சார்பில் திருச்சி உறையூர் பகுதியிலுள்ள பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் உள்ள முதியவர்களுக்கு மாவட்ட நெசவாளர் அணி பிரிவு தலைவர் தினகர் இரவு உணவை வழங்கினார்.

முன்னதாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் நல்வாழ்த்து பாடல் பாடியும், அவர் நீண்ட ஆயுளுடன் உடல்நலத்துடன் இருக்கவும், தொடர்ந்து இந்தியாவை நல்ல முறையில் ஆட்சி செய்யவும் வேண்டி முதியவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இறைவனிடம் கூட்டு பிரார்த்தனை செய்தனர்.

அதனைத் தொடர்ந்து அங்கு உள்ள முதியவர்களுக்கு திருச்சி மாவட்ட நெசவாளர் அணி பிரிவு மற்றும் மாவட்ட மாநில நிர்வாகிகள் இரவு உணவை பரிமாறினர்.

இந்த நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் பார்த்திபன், நெசவாளர் பிரிவு மாவட்ட செயலாளர் சீனிவாசராவ், மாவட்ட பொதுச்செயலாளர் காளீஸ்வரன், மாவட்ட பொருளாளர் சாய் பிரசன்னா, மாவட்ட பார்வையாளர் சேது அரவிந்த், சதீஷ், ரமேஷ், சுரேஷ் மற்றும் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *