பிறந்து பத்து நாட்களில் ஆன மிகவும் எடை (1.25 கிலோ) குறைவாக இருந்த பச்சிளம் குழந்தைகள் சிறுநீர் அடைப்பை எண்டோஸ்கோபிக் லேஸர் ஃபுல்ரேஷன் மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.அப்பொழுது செய்தியாளுக்கு பேட்டி அளித்த திருச்சி அப்போலலோ சிறப்பு மருத்துவமனையில் சிறுநீரகவியல் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் அழகப்பன் சொக்கலிங்கம்.

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளுக்கு இருபதாம் மாதம் எடுக்கக்கூடிய அநாமலிஸ்கேன் எனப்படும் குறைபாடுகள் கண்டறியும் பரிசோதனையில் குழந்தைக்கு இரண்டு சிறுநீரகம் மிகவும் வீக்கம் காணப்பட்டது கண்டறியப்பட்டது. இது மிகவும் அபாயகரமான நிலை என பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து இந்த சிக்கலால் குழந்தை இறப்பதற்கான வாய்ப்பு இருப்பது பெற்றோருக்கு உணர்த்தினர். இதனை தொடர்ந்து புதுகை மருத்துவமனையிலிருந்து திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இது போன்ற பிறந்து 10நாட்கள் எடை குறைவாக உள்ள இக்குழந்தைக்கு சிகிச்சை அளிப்பது மிகுந்த சவாலான ஒன்றாகும். இதற்கு மிகுந்த மருத்துவ நுண்ணறிவு, உலகத்தர உபகரணங்கள், தேர்ந்த மயக்க மருந்து நிபுணர், குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை நிபுணர்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவர்கள், மருத்துவர் அழகப்பன் சொக்கலிங்கம் ஆகியோர் கொண்ட குழுவினர் மூலமாக வெற்றிகரமாக குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இக்குழந்தை தற்பொழுது மருத்துவமனை கவனிப்பில் இருந்து வீடு திரும்பிய நிலையில் வெளி நோயாளியாக மருத்துவமனைக்கு வந்த குழந்தை தற்பொழுது மிகுந்த ஆரோக்கியத்துடன் 1.2கிலோகிராம் இருந்த குழந்தை தற்போது 6கிலோ எடையுடன் உள்ளது. தற்போது இந்த குழந்தை சாதாரண குழந்தைகளைப் போல் சிறுநீர் வெளியேற்றவும் இவருக்கு இருந்த வீக்கம் குறைந்தும் சிறுநீரகங்கள் திறன்பட இயங்குவதாக தெரிவித்தார். பேட்டியின் போது பொதுமேலாளர் சங்கீத், விற்பனை பிரிவு மூத்த மேலாளர் அனந்த ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்