திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி செஞ்சுருள் சங்கம், விரிவாக்கப் புலத்துறை மற்றும் விலங்கியல் துறை சார்பில் தன்னார்வ ரத்ததான முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. செஞ்சுருள் சங்கம் சார்பில் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் தன்னார்வ ரத்ததான முகாமானது அரசு மற்றும் தனியார் ரத்ததான வங்கிகளுடன் இணைந்து நடைபெற்று வருகிறது.

இந்தக் கல்வியாண்டின் ஆண்டின் ரத்ததான முகாம் இன்று செஞ்சுருள் சங்கம் மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரி விலங்கியல் துறை மற்றும் விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை திருச்சிராப்பள்ளியுடன் இணைந்து நடைபெற்றது இந்த தன்னார்வ ரத்ததான முகாமை பிஷப் ஹீபர் கல்லூரியின் விரிவாக்கப் புலத்துறை தலைவர் முனைவர் ஆனந்த் கிதியோன் தொடங்கி வைத்தார், விலங்கியல் துறை தலைவர் பிரிசில்லா சுரேஷ் வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனை மருத்துவர் அனிதா செல்லம் மற்றும்மருத்துவ குழுவினர்கள் பங்கேற்றனர். மேலும் கல்லூரி மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்று ரத்ததானம் செய்தனர். எழுபதிற்கும் மேற்பட்ட யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது. இத்தன்னார்வ ரத்ததான முகாமை தாவரவியல் துறை பேராசிரியை ஜெலின் ராணி, மற்றும் விலங்கியல் துறை பேராசிரியை முனைவர் புவனேஸ்வரி ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *