தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகம் முன்பு முழக்க போராட்டம் திருச்சி தஞ்சை மண்டலங்களின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராஜா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக 10 மேனல் உறுப்பு கல்லூரிகளில் தற்போது அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ள லால்குடி ஒரத்தநாடு பெரம்பலூர் அறந்தாங்கி நன்னிலம் திருத்துறைப்பூண்டி வேதாரண்யம் நாகப்பட்டினம் வேப்பூர் ஸ்ரீரங்கம் ஆகிய கல்லூரிகளில் பணியாற்றி வரும் 188 மணி நேர விரிவுரையாளர்களின் மாதாந்திர ஊதியத்தினை கௌரவ விரிவுரையாளர்களுக்கு அரசாணையின்படி வழங்கப்பட்டுள்ளது போல் 01-01- 2020 முதல் ரூபாய் 25 ஆயிரம் ஆக உயர்த்தி நிலுவைத் தொகையுடன் வழங்கப்பட வேண்டும், பி டி ஏ ஆசிரியர்கள் அலுவலர்களின் ஊதியத்தினை உயர்த்தி வழங்க கோரியும், மேனாள் பத்து உறுப்பு கல்லூரிகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுகின்ற தற்காலிக அலுவலர்களை பல்கலைக்கழகமே திரும்ப பெற்று பணிவரன் முறையுடன் கூடிய கால முறை ஊதியம் வழங்க கோரியும்,
உயர் நீதிமன்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் அரசாணை எண் 91ன் படி 2016 முதல் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு மறுக்கப்பட்ட மகளிர்க்கு உரிய நிவாரணம் வழங்க கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் முன்பு முழக்கப் போராட்டம் இன்று நடைபெற்றது இந்த முழக்க போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர் ஆசிரியைகள் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.