திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே கீழவங்காரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நீலாவதி, இதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் எழிலரசிக்கும் நீண்ட காலமாக இடப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் பிரச்சினைக்குறிய இடத்தில் இருந்த கட்டடத்தினை வழக்கறிஞர் எழிலரசி பொக்லின் இயந்திரம் மூலம் இடித்துள்ளார். இதனை தடுத்த நீலாவதியை வழக்கறிஞர் எழிலரசி மற்றும் அவரது கணவர் உள்ளிட்டோர் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த நீலாவதி மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு கடந்த 7 நாட்களாக தொடர்சிகிச்சைப் பெற்று வருகிறார் .

 இது தொடர்பாக சிறுகனூர் காவல்நிலையத்தில் நீலாவதியின் மகன் பிரகாஷ் புகார் அளித்தும், புகார் அளித்ததற்கான மனு ரசீதுவோ, வழக்கு பதியவில்லை. இது குறித்து திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் சிறுகனூர் காவல்நிலைய எஸ்.ஐ முருகையா வழக்கறிஞர் மீது கொடுத்தப் புகாரை வாபஸ் பெறவில்லை என்றால் உங்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக மிரட்டியுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட நீலாவதியின் மகன் பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது..

நான் கொடுத்த புகார் மீதும், புகாரை வாபஸ் பெற வேண்டுமென மிரட்டிய சிறுகனூர் எஸ்.ஐ முருகையா மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்