தமிழ்நாடு ஆரம்ப பள்ளி கூட்டணி மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில பொது செயலாளர் மயில் பேசுகையில், கரூர் மாவட்டம் குளித்தலை கடவூர் ஒன்றியத்தில் ஆசிரியர் ஒருவரை தற்காலிக பணி நீக்கம் செய்தார்கள். அதை எதிர்த்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சார்பில் குளித்தலை மாவட்ட கல்வி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இந்தப் போராட்டங்கள் காரணமாக அந்த ஆசிரியரின் பணிநீக்கம் கரூர் மாவட்ட கல்வி அதிகாரிகள் ரத்து செய்யப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 7 நபர்களை கரூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவின் பேரில் குளித்தலை கல்வி அதிகாரி பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது ஜனநாயகத்தின் குரலை பறிப்பதாக உள்ளது. தொடக்கக்கல்வி துறையில் மாறுதல் கலந்தாய்வு இன்னும் நடைபெறாமல் இருக்கிறது.இதை உடனடியாக நடத்த வேண்டும்.

கடந்த பொது மாறுதல் கலந்தாய்வில் மாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு கடந்த மூன்று மாதமாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. இவர்களுக்கு ஊதியம் வழங்கிட தொடக்க கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கை என்பது மாணவனின் நலனுக்கு எதிரானது. இதில் வளாக பள்ளி என்ற திட்டம் உள்ளது. இந்தத் திட்டம் மூலம் கிராமத்தில் உள்ள மாணவர்கள் பாதிக்கப்படுவர். தொடக்கக்கல்வித்துறையில் ஆயிரக்கணக்கில் ஆசிரியர் நியமனம் செய்யப்படாமல் இந்தப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தமிழகத்தில் மூன்றாம் மொழி என்பது மாணவர்கள் விரும்பினால் படிக்கலாம் அது திணிக்கக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *