தமிழ்நாடு வேளாண்மைத்துறை தோட்டக்கலைத்துறையில் பணிபுரியும் உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர், உதவி விதை அலுவலர், துணை வேளாண்மை அலுவலர், துணை தோட்டக்கலை அலுவலர் ஆகியோரின் சங்க அமைப்பு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டலில் ஞாயிறு அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சாமிக்கண்ணு தலைமை தாங்கினார். கருப்புசாமி முன்னிலை வகித்தார்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் தமிழ்செல்வி தலைமை உரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் லட்சுமி நாராயணன் சிறப்புரை ஆற்றினார். முன்னாள் மாநில செயலாளர் கண்ணன், தேனி மாவட்ட துணை தலைவர் முருகன், தமிழ்நாடு வணிகவரித்துறை மாநில தலைவர் லட்சுமணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.கூட்டத்தில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை இயக்குனர் அலுவலகங்களில் மத்திய, மாநில பல்வேறு திட்டங்களுக்காக ஏ.ஏ.ஒ, ஏ.எச்.ஒ புதிய பணியிடங்கள் உருவாக்க வேண்டும். ரூ 5000 -க்கு குறைவான திட்டங்களுக்கு பயிர் அடங்கள் தேவை இல்லை என்று வழங்க வேண்டும். . என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில தலைவராக எஸ்.ஏ.சாமிகண்ணு, மாநில பொது செயலாளராக எஸ். அடைக்கலசாமி, மாநில பொருளாளராக எம். பாலமுருகன், மாநில அமைப்புச் செயலாளராக வி. நித்தீஸ்வரன், மாநில துணை செயலாளராக எல். பேச்சியப்பன், மாநில தணிக்கையாளராக எஸ்.பாபு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக பாலமுருகன் வரவேற்றார். முடிவில் பால்பாண்டி நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.