திருச்சி ஈ வெ ரா கல்லூரியில் பேருந்து வசதி வேண்டி புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னனி சார்பாக ஐனாரெத்தினம் மாவட்ட செயற்குழு உருப்பினர் தலைமையில், அரிச்சந்திரன் மாவட்ட அமைப்பாளர் முன்னிலையில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் இன்று நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக திருச்சி ஈ வெ ரா கல்லூரியில் சுமார் 3,000 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அவர்கள் நாள்தோறும் கல்லூரி வருவதற்கும் கல்லூரியில் இருந்து செல்வதற்கும் பேருந்தினை சார்ந்தே இருக்கின்றனர். ஆனால் பேருந்தின் எண்ணிக்கையோ ஒரு மணி நேரத்திற்கு இரண்டு அதில் 200 மாணவர்கள் மட்டுமே பயணம் செய்ய முடிகிறது !மற்ற மாணவர்கள் அனைவரும் கல்லூரியில் இருந்து மன்னார்புரம் வரை நடந்து செல்லும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கல்லூரி மாணவர் அமைப்புகள் பலமுறை மனுக்கள் கொடுத்தும் கல்லூரி நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை இதனைக் கண்டித்து திருச்சி ஈ வெ ரா கல்லூரி வாயில் முன்பு கவனஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.