மக்கள் அதிகாரம் சார்பில் தமிழகத்தில் தொடரும் விஷச்சாராய படுகொலை திமுக அரசே நீதி வேண்டும்! பூரண மதுவிலக்கை அமல்படுத்து! கஞ்சா, கள்ளச்சாராயம் தடுக்காத மதுவிலக்கு மற்றும் , எஸ் பி உள்ளிட்டோரை தண்டிக்க சட்டம் இயற்று! உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ஜங்சன் காதி கிராப்ட் அருகில் ஜுன் 27 தேதி இன்று காலை 10 மணி முதல் நாளை 28ஆம் தேதி மாலை 6 மணி வரை தொடர் உண்ணா நிலை போராட்டம் இன்று தொடங்கியது.

இந்த தொடர் உண்ணா நிலை போராட்டத்திற்கு மக்கள் அதிகாரத்தின் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ராஜு தலைமை தாங்கினார். மக்கள் அதிகாரத்தின் மாநில பொருளாளர் காளியப்பன் உண்ணாநிலை போராட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து மக்கள் அதிகாரத்தின் மாநில இணைச் செயலாளர் செழியன், மாநிலத் துணைச் செயலாளர் பாலு, சென்னை மாவட்ட செயலாளர் ஆனந்தன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மக்கள் அதிகாரம் சார்பில் கொட்டும் மழையில் நடந்த இந்த உண்ணா நிலை போராட்டத்தில் காங்கிரஸ், சி.பி.எம், சி.பி.ஐ , தி .க, விடுதலை சிறுத்தைகள் கட்சி. இஸ்லாமிய இயக்கங்கள், விவசாய சங்கங்கள், பொதுநல அமைப்பினர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் உண்ணாநிலை போராட்டத்தில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்