பெட்ரோல் விலை லிட்டர் ரூபாய் 105 டீசல் விலை லிட்டர் ரூபாய் 101 சமையல் எரிவாயு விலை ரூபாய் 1000 என்று தினசரி உயர்ந்து வருவது ஒன்றிய அரசின் கலால் வரி விதிப்பு முறைகளே இதற்கு முக்கிய காரணமாகும்.இதன் விளைவாக அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வருகின்றன. பொதுமக்களின் செலவுச்சுமையை கூட்டி வரும் ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்தும்,

ஒன்றிய அரசு சுங்க, கலால் வரியை குறைக்க வேண்டுமென ஒன்றிய அரசை வலியுறுத்தி அக்டோபர் 30-ஆம் தேதி தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சைக்கிள் பேரணியை நடத்தியது. அதன் ஒரு பகுதியாகதிருச்சி மாநகர் மேற்கு சட்டமன்ற தொகுதியில் மாவட்ட குழு உறுப்பினர் சத்யா தலைமையில் இன்று உறையூரில் துவங்கிய சைக்கிள் பேரணியை திருச்சி மாவட்ட ஏஐடியூசி பொதுச்செயலாளர் சுரேஷ் துவக்கி வைத்தார். சைக்கிள் பேரணி உறையூர் நாச்சியார் கோவில், கடைவீதி,சாலைரோடு, தில்லை நகர், 80 அடி சாலை, விஸ்வப்பநாயக்கன் பேட்டை தெரு, புத்தூர் ஹை ரோடு வழியாக அக்ரஹாரம் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

சைக்கிள் ஊர்வலத்தில் மேற்குப் பகுதி செயலாளர் முரளி துணைச் செயலாளர் சரண்சிங் பொருளாளர் ரவீந்திரன் பகுதி குழு உறுப்பினர்கள் ஆனந்தன், நாகராஜன், துரைராஜ், ஆறுமுகம்,தங்கையன் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநகர தலைவர் முருகேசன் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மாநகர் மாவட்ட செயலாளர் இப்ராஹிம் பெயிண்டர் சங்க தலைவர் செந்தில் உள்பட 50க்கு மேற்பட்டவர்கள் சைக்கிள் ஊர்வலத்தில் பங்கு பெற்று விலை உயர்வுக்கு எதிராக கோஷமிட்டு வந்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு முன்னாள் உறுப்பினர் செல்வராஜ் மாநகர் மாவட்ட செயலாளர் திராவிடமணி நிறைவுரையாற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *