தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் 100-தாண்டி செல்லும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக ராமகிருஷ்ணா பாலம் அருகே மரக்கடையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த பொதுமக்களுக்கு 7500 நிவாரணத் தொகை வழங்கிட கோரியும், 10 கிலோ உணவு தானியம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்கிட கோரியும்,

கொரோனா தடுப்பூசி தடையின்றி மாநிலங்களுக்கு இலவசமாக வழங்க கோரியும், செங்கல்பட்டில் தடுப்பு ஊசி தயாரிக்க தமிழக அரசுக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாநகர் மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ மாவட்ட செயலாளர் திராவிட மணி தலைமை தாங்கினார் மேலும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *