மோட்டார் வழக்குகள் தொடர்பான தீர்ப்பாயத்திற்கான நீதிமன்றம் திருச்சியில் செயல்பட்டு வருகிறது – மேலும் இரண்டாவது சிறப்பு நீதிமன்றத்தை இன்று காலை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல் குமார் துவக்கி வைத்தார். மோட்டார் வாகனங்கள் விபத்து ஏற்படும் போது அது சார்ந்த வழக்குகளில் தீர்ப்பு தாமதமாவதை தடுக்கும் வகையில் விரைந்து தீர்ப்புகள் வழங்கப்பட ஏதுவாக இந்த 2வது நீதிமன்றம் செயல்பட உள்ளது.இந்நிகழ்வில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி,திருச்சி முதன்மை நீதிபதி பாபு,தமிழகநகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சிமாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்,திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்தியபிரியா திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், மற்றும் திருச்சி வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல் குமார் பேசுகையில் கூறியதாவது:-
மேலும் இந்த சமுதாயத்தில் குழந்தைகள் மீதான பாலியல் தொந்தரவு வழக்கு, போக்சோ வழக்கு என தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆகையால் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்கள், மாணவ, மாணவிகளுக்கு இது குறித்து விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு குட் டச் ,பேட் டச், மற்றும் சமுதாயத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதே சமயம் நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் ஒன்றிணைந்து தொடர்ந்து பாலியல் ரீதியான குற்றங்களுக்கு எதிராக விழிப்புணர்வு, கருத்தரங்கள் நடத்தி பொது மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
திருச்சி நீதிமன்றம் என்பது ஒரு பழமையான நீதிமன்றம் வரலாற்று சிறப்புடையது. அதேசமயம் திருச்சி பார் கவுன்சில் ஆரம்பித்து 134 ஆண்டுகள் கடந்தும் நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் ஒற்றுமையாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து நீதிபதிகளும், வழக்கறிஞர் ஒன்றினைந்து நீதியை நிலைநாட்ட வேண்டும், மக்களுக்கு சரியான சட்ட ரீதியான நீதிகளை பெற்று தர வேண்டும் என அனைவரையும் வாழ்த்தினார்.